Anna University Recruitment 2024 : அண்ணா பல்கலைக்கழகத்தின் துறைகளில் பணிப்புரிய Teaching Fellow பதவிகளுக்கு தற்காலிக அடிப்படையில் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. உற்பத்தி பொறியியல் மற்றும் பயோமெடிக்கல் பொறியியல் ஆகிய துறைகளுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Anna University Recruitment 2024 : அண்ணா பல்கலைக்கழகத்தின் துறைகளில் கற்பிக்க Teaching Fellow பதவிகளுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணியிடங்கள் தற்காலிகமாக நிரப்பப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தின் பொறியியல் கல்லூரியில் உள்ள உற்பத்தி பொறியியல் மற்றும் பயோமெடிக்கல் பொறியியல் ஆகிய துறைகளில் இவ்விடங்கள் நிரப்பப்படவுள்ளது.
| பதவியின் பெயர் | காலிப்பணியிடம் |
| உற்பத்தி பொறியியல் | 3 |
| பயோமெடிக்கல் பொறியியல் | 4 |
| மொத்தம் | 7 |
வயது வரம்பு :
அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள இப்பணியிடங்களுக்கு வயது வரம்பு குறித்த தகவல் அறிவிப்பில் இடம்பெறவில்லை.
சம்பள விவரம் :
அண்ணா பல்கலைக்கழகம் கிண்டி பொறியியல் கல்லூரியில் Teaching Fellow பதவிகளுக்கு மாதம் ரூ.25,000 சம்பளமாக வழங்கப்படும்.
கல்வித்தகுதி:
அண்ணா பல்கலைக்கழகத்தில் உற்பத்தி பொறியியல் துறைக்கு மெக்கானிக்கல் /உற்பத்தி/ ப்ரோடக்ஷன் பொறியியல் / ஸ்மார்ட் உற்பத்தி ஆகிய பாடப்பிரிவுகளில் B.E. / B.Tech மற்றும் உற்பத்தி/ ப்ரோடக்ஷன்/ கணினி ஒருங்கிணைந்த உற்பத்தி/ ரோபோட்டிக்ஸ்/ ஆட்டோமோஷன்/ CAD/CAM/மெகாட்ரானிக்ஸ்/ ஸ்மார்ட் உற்பத்தி அல்லது அதற்கு நிகரான பாடப்பிரிவுகளில் M.E. / M.Tech படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பயோமெடிக்கல் பொறியியல் துறைக்கு எலெக்ட்ரிக்கல் மற்றும் மக்கள் தொடர்பியல்/ எலெக்ட்ரானிக்ஸ் & இன்ஸ்ரூமெண்டேஷன்/ பயோமெடிக்கல்/ மெடிக்கல் எலெக்ரானிக்ஸ் ஆகிய பாடப்பிரிவுகளில் B.E. / B.Tech மற்றும் மெடிக்கல் எலெக்ரானிக்ஸ்/ பயோமெடிக்கல்/ பயோமெடிக்கல் இன்ஸ்ரூமெண்டேஷன் ஆகிய பாடப்பிரிவுகளில் M.E. / M.Tech முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
தேர்வு செய்யப்படும் முறை :
இப்பதவிகளுக்கு விண்ணப்பத்தாரர்களில் இருந்து தகுதியானவர்கள் தெரிவு செய்யப்படுவர். அவர்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் பணி வழங்கப்படும். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு 6 மாதக் காலத்திற்கு பணி வழங்கப்படும். அதனைத்தொடர்ந்து, பணி காலம் நீட்டிக்கப்படலாம்.
விண்ணப்பிக்கும் முறை :
அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் https://www.annauniv.edu/ என்ற இணைய முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப்படிவத்தின் மூலம் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். அறிவிப்பை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.
முக்கிய நாட்கள் :
| விவரம் | முக்கிய நாட்கள் |
| விண்ணப்பிக்க கடைசி நாள் | 16.08.2024 |
| எழுத்துத் தேர்வு | பின்னர் அறிவிக்கப்படும் |
| நேர்காணல் | பின்னர் அறிவிக்கப்படும் |
அண்ணா பல்கலைக்கழகம் கிண்டி பொறியியல் கல்லூரியில் Teaching Fellow பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் மேல் குறிப்பிட்டுள்ள இணைப்பின் மூலம் அறிவிப்பை படித்து ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கவும்.
நன்றி samayam
