அதர்வாவின் பாய்ச்சல்! ‘DNA’ படம் எப்படி இருக்கிறது? விமர்சன பார்வை!
DNA Movie Review: தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் ஹீரோக்களில் முக்கியமான ஒருவராக அதர்வா உள்ளார். அவரது நடிப்பில் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் தான் டிஎன்ஏ (DNA). நீண்ட நாட்களாகவே இந்த படத்தின் மீது ஒரு எதிர்பார்ப்பு இருந்து வந்தது. இந்த படத்தில் அதர்வா தவிர நிஷா சஜயன், பாலாஜி சக்திவேல், சேத்தன், ரமேஷ் திலக் போன்ற பலர் நடித்துள்ளனர். ஒலிம்பியா ஃபிலிம்ஸ் இந்த படத்தை தயாரிக்க ஜிப்ரான் இசையமைத்துள்ளார். சமீபத்தில் வெளியான இந்த படத்தின் டிரைலர் பலரின் கவனத்தை ஈர்த்தது நிலையில், இந்த வாரம் வெள்ளிக்கிழமை படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
படத்தின் திரைவிமர்சனம்
படத்தின் தொடக்கத்தில் அதர்வாவிற்கு ஒரு பிரேக்கப் ஆகிற.து அதிலிருந்து மீண்டு வரும் அவருக்கு சற்று மனநலம் குன்றிய நடிகை நிமிஷா சஜயனை திருமணம் செய்து வைக்கின்றனர். இருவருக்கும் ஒரு ஆண் குழந்தை பிறக்கிறது, ஆனால் மருத்துவமனையில் அவரது குழந்தைக்கு பதில் வேறு ஒரு குழந்தை கொடுக்கப்படுகிறது. இதனை கண்டுபிடிக்கும் நிமிஷா சஜயன் மற்றும் அதர்வா தனது குழந்தையை தேடி செல்கின்றனர். இந்த பயணத்தில் அவருக்கு பல திடுக்கிடும் உண்மைகள் தெரிய வருகிறது. இறுதியில் அவரது குழந்தையை கண்டுபிடித்தாரா இல்லையா? இதற்கு பின்னால் உள்ள சதி வேலைகளை என்ன என்பதை சுவாரசியமாக சொல்லி இருக்கும் படம் தான் டிஎன்ஏ (DNA).
Nandri zeenews.india