கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட அனைத்து மாவட்ட செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் இணைய பக்கத்துடன் இணைந்திருங்கள்.
குற்றாலத்தில் 6-வது நாளாக தடை: தமிழகத்தின் தென் மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தென்காசி மாவட்டத்தின் குற்றாலத்தில் அருவிகளில் வெள்ளப்பெருக்கு அதிகரித்துள்ளதால், சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த தடை 6-வது நாளாக இன்றும் நீடிக்கப்பட்டுள்ளது.
சிறுவாணி அணை நீர்மட்டம்: சிறுவாணி அணை நீர்மட்டம் தொடர்ந்து உயர்வு. நாற்பது அடியை நெருங்குகிறது. நேற்று அணையின் நீர்மட்டம் 34.80 அடியாக இருந்த நிலையில், தற்போது 37.10 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் வரையறுக்கப்பட்ட கொள்ளளவு 44.61 அடியாக இருக்கும் நிலையில், அணைக்கட்டு பகுதியில் மழை நீடித்தால் அணை விரைவில் நிரம்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நன்றி tamil.indianexpress