நேற்று வரையில் இந்த திரைப்படம் ரூ. 25 கோடி அளவுக்கு சீனாவில் வசூல் செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகி மிகப் பெரும் வரவேற்பை பெற்று வரும் மகாராஜா திரைப்படம் சீனாவிலும் தற்போது வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இதைத் தொடர்ந்து இந்த படத்தை ஜப்பானில் வெளியிட படக் குழுவினர் முயற்சி செய்து வருகின்றனர். விரைவில் ஜப்பானில் மகாராஜா படத்துடைய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட உள்ளது

குரங்கு பொம்மை புகழ் இயக்குநர் நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் வெளியான விஜய் சேதுபதியின் 50வது படம் தான் ‘மகாராஜா’.இதில், விஜய் சேதுபதி, பாலிவுட் இயக்குநர் மற்றும் நடிகர் அனுராக் காஷ்யப், பாரதிராஜா, மம்தா மோகன்தாஸ், அபிராமி, நட்டி, சிங்கம் புலி, முனீஸ்காந்த் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

பெண் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் பாலியல் வன்கொடுமையை மையமாக வைத்து உருவான இப்படத்தின் திரைக்கதை பார்வையாளர்களின் மனதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. திரையரங்குகளில் மட்டும் இந்த படம் சுமார் ரூ. 140 கோடி அளவுக்கு வசூலித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

மேலும், இந்த படம் ஓடிடியில் வெளியாகி அதிலும் ட்ரெண்டிங்கில் இருந்தது. 2024ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் வெளியான திரைப்படங்களில் ‘மகாராஜா’ படம் லட்சக்கணக்கான ரசிகர்களின் மனதை கவர்ந்தது.

இதற்கிடையே படக்குழுவினர் மகாராஜா படத்தை சீனாவிலும் வெளியிட்டனர். நேற்று வரையில் இந்த திரைப்படம் ரூ. 25 கோடி அளவுக்கு சீனாவில் வசூல் செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சீனாவில் மகாராஜா படத்திற்கு மிகப்பெரும் வரவேற்பு கிடைத்திருப்பதால் பட குழுவினர் உற்சாகத்தில் உள்ளனர். தொடர்ந்து இந்த படத்தை ஜப்பானிலும் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. விரைவில் மகாராஜா திரைப்படம் ஜப்பானில் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட உள்ளது.

Nandri news18

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *