அண்ணா நகரில் 60 விழுக்காட்டிற்கும் அதிகமான பகுதிகளை வாகனங்கள் ஆக்கிரமிப்பதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும், வணிக நிறுவனங்களின் வருவாயும் பாதிக்கப்படுவதாக சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், சாலையோரம் நிறுத்தப்படும் அனைத்து வாகனங்களுக்கும் ஸ்மார்ட் பார்க்கிங் திட்டத்தின் கீழ் கட்டணம் வசூலிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
முக்கிய சாலைகள் மட்டுமின்றி, குடியிருப்புச் சாலைகளும் ஸ்மார்ட் பார்க்கிங் திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளது. பார்க்கிங்கிற்காக அண்ணா நகரில் 2 ஆயிரம் இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது. இதில், சரக்கு வாகனங்களுக்கு மணிக்கு 60 ரூபாயும், கார்களுக்கு 40 ரூபாயும், பைக்குகளுக்கு 20 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படும். குடியிருப்பு சாலைகளில் கார்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு 20 ரூபாயும், பைக்குகளுக்கு 10 ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Thank you news18