Tamilnadu Government : தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு ரூ.12,000 ஊக்கத்தொகையுடன் தமிழ்நாடு அரசு கொடுக்கும் இலவச பயிற்சி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.முழு விவரம் இங்கே தெரிந்து கொள்ளுங்கள்
Tamilnadu Government : அனைத்து துறைகளிலும் தமிழ்நாட்டை இந்தியாவின் முதன்மை மாநிலமாகஉருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழ்நாடுஅரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்த வருகிறது. குறிப்பாக பள்ளிக்கல்வி துறையில்அதிக கவனம் செலுத்தி வருகிறது. அதற்கு சான்றாகவே தமிழகத்தில் அனைவரும் உயர்கல்வி பயில வேண்டும் என்ற உயரிய எண்ணத்தில் நான் முதல்வன், தமிழ்ப் புதல்வன், புதுமைப் பெண் போன்ற பல்வேறு சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
வெற்றி நிச்சயம் திட்டம் என்றால் என்ன?
தமிழகத்தில் படித்தும் வேலையில்லாத இளைஞர்கள், படிப்பை பாதியிலேயே நிறுத்தியவர்கள் அனைவருக்கும் என வேலை வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 01 ஜீலை 2025 அன்று அறிமுகப்டுத்திய முன்னோடி திட்டமே வெற்றி நிச்சயம் திட்டம் (VertriNichayamThittam). இந்த திட்டத்தின் மூலமாக இளைஞர்களுக்கு தொழில்துறை சான்றிதழுடன் பல்வேறு துறைகளிலும் இலவச குறுகியகால திறன் பயிற்சிகள் வழங்கப்படும்.
வெற்றி நிச்சயம் திட்டத்தின் சிறப்பம்சங்கள்
மாவட்டந்தோறும் உள்ள முதன்மையான தொழிற்பிரிவுகளை கண்டறிந்து அது தொடர்புடைய பயற்சி நிறுவனங்கள், தொழில் துறைநிறுவனங்கள் மற்றும் அரசு சார்ந்த திறன் பயிற்சி முன்னெடுப்புமூலமாக அந்தந்த மாவட்டங்களைச் சார்ந்த இளைஞர்களுக்குதிறன் பயிற்சி வழங்கப்படும். தொலைத் தொடர்பு, விவசாயம், விண்வெளி, ஆடைகள், BFSI, தானியங்கி, மூலதனம் பொருட்கள்,கட்டுமானம், மின்னணுவியல், சுகாதாரம், ஐடி, சில்லறை விற்பனை,
பசுமைவேலைகள், உணவுத் தொழில் போன்ற பல்வேறு துறைகளில் நிபுணத்துவம் வாய்ந்த பயிற்சியாளர்களை கொண்ட தரமான பயிற்சிகள் வழங்கப்படுவதோடு, ஜெர்மன் உள்ளிட்ட அயல்மொழிப் பயிற்சிகள் அளிக்கப்பட்டு தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு வெளிநாட்டில் வேலைவாய்ப்பு கிடைப்பதற்கான பாதைகள் உருவாக்கித் தரப்படும்.
வளர்ந்து வரும் தொழில்துறைக்குஏற்ப இளைஞர்கள் தாங்கள் விரும்பும் மிகப்பெரியநிறுவனங்களின் வேலைவாய்ப்பை சுலமாக பெறுவதற்கும், அதற்கு தகுந்த நவீன தொழில் நுட்பம் சார்ந்த திறன் பயிற்சிகள் வழங்கப்படும். வெற்றி நிச்சயம் திட்டத்தின் முக்கியமான நன்மைகள் – இந்ததிட்டத்தின் வாயிலாக உலகத் தரம் வாய்ந்த 500க்கும் மேற்பட்ட முன்னணி பயிற்சி நிறுவனங்கள் மற்றும் தொழில்துறை நிறுவனங்கள் இணைந்து 38 தொழிற்பிரிவுகளில் 166 திறன் பயிற்சிகள் இலவசமாக வழங்கப்பட உள்ளன. மேலும், இந்த பயிற்சிக்கான மொத்த கட்டணத்தையும் அரசே செலுத்தும். இதனால், மாணவர்கள் எந்தவொரு நிதிச் சிக்கலையும்எதிர்கொள்ளாமல் தங்கள் படிப்பை முடிக்க முடியும் . மற்றொரு நன்மையாக, பயிற்சியின் போது இதர செலவுகளை ஈடுகட்ட பயனாளிகளுக்கும்ரூ.12,000 ஊக்கத் தொகையும் அரசு சார்பாக வழங்கப்படும்.
அதுமட்டுமல்லாமல், தொலைதூர மாவட்டங்களிலிருந்து, பயிற்சிபெற விரும்பும் மாணவர்களுக்கு,உணவுடன் கூடிய இருப்பிடவசதியும், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மூலமாக வழங்கப்படும். பயிற்சியின் இறுதியில் ஒவ்வொருவருக்கும் அங்கீகரிக்கப்பட்ட திறன் சான்றிதழ் வழங்கப்படும். இந்த சான்றிதழ் இளைஞர்கள் தங்கள் கனவு நிறுவனங்களில் வேலை பெற மிகவும் உறுதுணையாக இருக்கும். மாற்றுத்திறனாளிகள், பழங்குடியினர். இலங்கைத் தமிழர்கள், சிறுபான்மையினர், மீனவ இளைஞர்கள், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு இளைஞர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் என்று சமூக மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய வகுப்பினர்கள் அனைவருக்கும் இந்தத் திட்டத்தில் முன்னுரிமை அளிக்கப்படும்.
வெற்றி நிச்சயம் திட்டத்தின் தகுதி வரம்புகள்
இந்த திட்டத்தின்கீழ் பயன்பெற விரும்பும் விண்ணப்பதார் தமிழ்நாட்டில் வசிப்பவராகவும், 18 முதல் 35 வயதுக்குட்பட்டவாராகவும்இருக்க வேண்டும். வேலை தேடுபவராகவும் இருக்க வேண்டும் அல்லது பள்ளி/கல்லூரி படிப்பைபாதியில் நிறுத்தியவராக இருக்கவேண்டும். மேலும் விபரம் அறிய தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் வாழ்வாதார உதவி அழைப்பு எண் 155330 தொடர்பு கொள்ளலாம். கூடுதல் தகவல்களுக்கு ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம், தொலைபேசி எண்:9444094172 ஆகியவற்றை தொடர்பு கொள்ளலாம்.
nandri zeenews