Rajasthan Jet Crash | ராஜஸ்தானில் இந்திய விமானப் படைக்குச் சொந்தமான ஜாகுவார் போர் விமானம் விழுந்து நொறுங்கியதில் விமானிகள் இருவர் உயிரிழந்தனர்.
ராஜஸ்தானில் இந்திய விமானப் படைக்குச் சொந்தமான ஜாகுவார் ரக போர் விமானம் விழுந்து நொறுங்கியதில் விமானிகள் இருவர் உயிரிழந்தார்.
ராஜஸ்தான் மாநிலம், கரு மாவட்டத்தில் உள்ள பனோடா கிராமத்தில் இந்திய விமானப் படைக்குச் சொந்தமான ஜாகுவார் விமானம் விழுந்து விபத்திற்குள்ளானது. வான்வெளியில் தடுமாறியபடி பறந்த விமானம், வயல்வெளியில் விழுந்து நொறுங்கியது. கிராம மக்கள் அளித்த தகவலின்பேரில் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.