தமிழ் சினிமாவில் தொடக்க காலத்திலிருந்தே
எம்.ஜி.ஆர் -சிவாஜி , ரஜினி -கமல்,
விஜய் -அஜித் என ஒவ்வொரு தலைமுறையின்பொழுதும்
தமிழ் சினிமா சிறந்த ‘போட்டி’ நடிகர்களை கண்டு வருகிறது .
அதே சமயம் அவர்களின் நட்பும் பாராட்டப்படுகிறது .
விஜய் ,அஜித் தங்களின் வாழ்க்கை லட்சியங்களை பல்வேறு போராட்டங்கள் ,கடின உழைப்பினால் இந்த நிலையை எட்டியுள்ளனர் .

விஜய்,அஜித் இருவரும் திரைத்துறையில் நடிகர்களாக இருக்கும்பொழுதே தங்களது கடின உழைப்பினால் ஒருவரையொருவர் சிறந்த முறையில் வளர்த்து கொண்டனர்.
திரைத்துறையில் இருவரும் போட்டி நடிகர்களாக கருதப்பட்டனர் .

தங்களின் வாழ்க்கை லட்சியங்களை கனவு கண்டு அதனை வாழ்வின் நிஜத்தில் கொண்டு வந்துள்ளனர் .
கால மாற்றத்திற்கேற்ப தங்களின் அடுத்த கட்ட வளர்ச்சியாக திரு.விஜய் அவர்கள் அரசியலில் களம் கண்டு வெற்றி வாகை சூடி தற்பொழுது தமிழ்நாடு முதல்வராக உள்ளார் .
அஜித் அவர்கள் தன் கனவான கார் பந்தய அணி உருவாக்கி கார் பந்தய போட்டிகளில் பங்கேற்று வருகிறார் .
தொழில் முதலீடுகளை ஈர்க்க லண்டன் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதல்வர் விஜய், லண்டன் சில்வர் ஸ்டோன் சர்க்கியூட்டுக்கு வருகை தந்திருந்தார் .
அங்கு நடிகர் அஜித் கலந்துகொள்ளும் கார் பந்தயத்தை முதல்வர் விஜய் அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைக்க திட்டமிடப்பட்டிருந்தது .
அங்கு அஜித்தை சந்தித்து வாழ்த்து கூறி நலம் விசாரித்து அஜித்தோடு இணைந்து புகைப்படம் எடுத்து கொண்டார் . பின் அங்கு கூடியிருந்த ரசிகர்களை கையசைத்து உற்சாகப்படுத்தினார் .அதன்பிறகு முதல்வர் விஜய் கொடியசைத்து போட்டியை துவக்கி வைத்தார் .

இருவரது இணைவும் ,நிகழ்ச்சிகளில் ஒன்றாக பங்கு கொள்வதும் ரசிகர்களுக்கு ஆச்சரியம் கலந்த சந்தோஷமும் ,இன்ப அதிர்ச்சியாகவும் இருந்தது.
மேலும் பொது மக்களிடையே இவர்களின் ‘நட்பும்’ நல்ல வரவேற்பை பெற்றுள்ளது .
இவர்களின் திரைப்படங்களின் வழியே பல “கருத்துக்களையும், வசனங்களையும்”
தங்கள் வாழ்வில் எடுத்துக்கொண்ட இவர்களின் ரசிகர்கள் இவர்களின் ‘நட்பையும்’
இதே போல் தங்கள் வாழ்வில் எடுத்துக்கொண்டால் நட்புணர்வும்,
‘நாம்’ என்ற ஒற்றுமையும் , நல்லதொரு மாற்றமாக அமையும்.
தல ,தளபதி ரசிகர்களின் பிளவுகளுக்கிடையே இது ஒரு “ஆரோக்கியமான நட்புக்கு” எடுத்துக்காட்டாக உள்ளது .
“கனவெல்லாம் பலிக்குதே” பாடல் நினைவுக்கு வருகிறது ….!

