TN Govt Mega Job Fair 2024 : தமிழக அரசு படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தி தரும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை முன்னெடுத்து வருகிறது. அதில் ஒரு பகுதியாக மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மூலம் மாவட்ட வாரியாக தனியார் நிறுவனங்களுடன் இணைத்து வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது. இதன் மூலம் ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு தகுதிக்கேற்ற வகையில் தனியார் நிறுவனங்களில் வேலை கிடைத்துள்ளது. அந்த வகையில், வரும் டிசம்பர் 14-ம் தேதி மதுரையில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.

TN Govt Mega Job Fair 2024 in Madurai : மத்திய, மாநில அரசு வேலைகள் என்று மட்டும் இல்லாமல் தனியார் நிறுவனங்களில் இருக்கும் வேலைவாய்ப்புகளை இளைஞர்களுக்கு ஏற்படுத்தி தரும் வகையில் தமிழக அரசு மூலம் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் மாவட்ட வாரியாக நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் டிச்மபர் 14-ம் தேதி மதுரையில் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இந்த முகாம் மூலம் சுமார் 10,000 பேருக்கு வேலைக் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

மதுரையில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்
மதுரை மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து 14.12.2024 சனிக்கிழமை காலை 9 மணி முதல் மதுரை சமூக அறிவியல் கல்லூரி, அழகர்கோவில் ரோடு, மதுரை – 2 வளாகத்தில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

முகாமின் சிறப்பம்சங்கள்
  • இந்த முகாமில் 200க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்கள் கலந்துகொள்கின்றன.
  • இதன் மூலம் 10,000த்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் நிரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
  • மேலும் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை விண்ணப்பம் மற்றும் போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகளுக்கான விண்ணப்பம் தகுதியுள்ளவர்களுக்கு வழங்கப்படும்.
  • அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்திற்கு பதிவு வழிகாட்டுதல்கள் இலவச திறன் மேம்பாட்டு பயிற்சிக்கான பதிவுகள் ஆகியவையும் இந்த முகாமில் வழங்கப்படும்.
யாரெல்லாம் மிகாமில் கலந்துகொள்ளலாம்?
மதுரையில் நடைபெறும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாமில் 8ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு முடித்தவர்கள் வரையும், ஐடிஐ, டிப்ளமோ, நர்சிங், பார்மஸி, பொறியியல், கணினி இயக்குபர்கள், தையல் கற்றவர்கள் ஆகியவர்கள் கலந்துகொள்ளலாம்.

மேலும் இந்த முகாம் குறித்த விவரங்களுக்கு துணை இயக்குநர், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், கோ.புதூர், மதுரை – 7 என்ற முகவரியில் அறிந்துகொள்ளலாம். தனியார் வேலைவாய்ப்பு குறித்து அறிந்து கொள்ள https://www.tnprivatejobs.tn.gov.in/ என்ற இணையதளத்தில் பதிவி செய்து கொள்ளலாம்.

Nandri samayam

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *