தமிழ்நாட்டில் காலியாக உள்ள முதுகலை ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் நிலை – 1 மற்றும் கணினி பயிற்றுநர் நிலை – ஆகிய பணியிடங்களுக்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளுக்கான ஆசிரியர் பணியிடங்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) மூலம் போட்டித்தேர்வுகள் நடத்தப்பட்டு நிரப்பப்பட்டு வருகிறது. இந்நிலையில், பள்ளிக்கல்வித்துறை மற்றும் இதர துறைகளில் உள்ள 1,996 காலிப்பணியிடங்களுக்கான முதுகலை ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் நிலை-1 மற்றும் கணினி பயிற்றுநர் நிலை – 1 ஆகிய பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணியிடக்களுக்கு ஆன்லைன் வழியாக விண்ணப்பம் இன்று (ஜூலை 10) முதல் பெறப்படுகிறது. இதற்கான தேர்வு செப்டம்பர் 28-ம் தேதி நடைபெற உள்ளது.
TRB முதுகலை ஆசிரியர் தேர்வு அறிவிப்பு 2025
தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறையின் முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்ப அடுத்த மாதம் அறிவிப்பு வெளியாகும் என ஆசிரியர் தேர்வு வாரியத்தின் 2025-ம் ஆண்டுக்கான ஆண்டு அட்டவணையில் குறிப்பிட்டு இருந்த நிலையில், ஜூலை மாதமே அதற்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. முதுகலை ஆசிரியர் மட்டுமின்றி உடற்கல்வி இயக்குநர் மற்றும் கணினி பயிற்றுநர் ஆகிய பதவிகளுக்கும் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

காலிப்பணியிடங்களின் விவரம்
முதுகலை ஆசிரியர் பாட வாரியாக மற்றும் துறை வாரியாக காலிப்பணியிடங்கள், கணினி பயிற்றுநர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் ஆகிய பணியிடங்களுக்கான விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
வயது வரம்பு
01.07.2025 தேதியின்படி விண்ணப்பதார்கள் அதிகபடியாக 53 வயது வரை இருக்கலாம். எஸ்சி, எஸ்டி, பிசிஎம், பிசி, எம்பிசி/டிஎன்சி பிரிவினர் 58 வயது வரை இருக்கலாம்.
கல்வித்தகுதி
  • முதுகலை ஆசிரியர் பதவிக்கு முதுகலை பட்டப்படிப்பு மற்றும் B.Ed முடித்திருக்க வேண்டும். ஒருங்கிணைந்த B.Ed முடித்து, முதுகலை பட்டம் பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம்.
  • உடற்க்லவி இயக்குநர் பதவிக்கு B.P.Ed அல்லது BPE அல்லது உடல்நலம் மற்றும் உடற்கல்வி பாடத்தில் B.Sc முடித்திருக்க வேண்டும். M.P.Ed முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.
  • கணினி பயிற்றுநர் பதவிக்கு முதுகலை பட்டம் மற்றும் B.Ed முடித்திருக்க வேண்டும். முழுமையான கல்வித்தகுதியை அறிவிப்பில் அறிந்துகொள்ளலாம்.
தேர்வு செய்யப்படும் முறை
இப்பணியிடங்களுக்கு தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். கட்டாய தமிழ் மொழி தகுதித் தேர்வு, முதன்மை பாடம் எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பணி நியமனம் வழங்கப்படும். எழுத்துத் தேர்வு ஓஎம்ஆர் தாளில் கொள்குறி வகையில் நடைபெறும்.

ஆன்லைன் வழியாக விண்ணப்பம் ஜூலை 10 முதல் தொடங்கிய நிலையில், ஆகஸ்ட் 12-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்தை திருத்த ஆகஸ்ட் 13 முதல் 16 வரை அவகாசம் வழங்கப்படுகிறது. இதற்கான தேர்வு செப்டம்பர் 28-ம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய நாட்கள்
விவரம்தேதிகள்
விண்ணப்பம் தொடங்கும் நாள்10.07.2025
விண்ணப்பிக்க கடைசி நாள்12.08.2025
விண்ணப்பம் திருத்தம் கால அவகாசம்13.08.2025 முதல் 16.08.2025
தேர்வு தேதி28.09.2025

அரசு பள்ளியில் ஆசிரியர் பணிக்கான காத்துக்கொண்டு இருப்பவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு ஆன்லைன் வழியாக உடனே விண்ணப்பிக்கலாம்.
Nandri tamil.samayam

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *