புதுச்சேரியில் உள்ள பல்வேறு அரசுத்துறைகளில் காலிப் பணியிடங்களை நிரப்ப தொடர்ச்சியாக அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. இதில் விஏஓ தேர்வுக்கான ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்வது எப்படி என்பது குறித்து பார்க்கலாம்.
புதுச்சேரியில் உள்ள பல்வேறு அரசுத்துறைகளில் காலிப் பணியிடங்களை நிரப்ப தொடர்ச்சியாக அறிவிப்புகள் வெளியாகி வருகிறது.
இதற்கு விண்ணப்பித்தவர்களுக்கான தேர்வு முறை குறித்த விவரங்கள் மற்றும் ஹால்டிக்கெட் டவுன்லோடு செய்வது தொடர்பான அறிவிப்பை அரசு தரப்பு வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக புதுச்சேரி அரசு தேர்வு அமைப்பு வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது,
புதுச்சேரி வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையில் காலியாக உள்ள 41 கிராம நிர்வாக அதிகாரி பதவிகளுக்கான எழுத்துத்தேர்வு வருகிற 21-ந் தேதி நடக்கிறது. இதற்காக புதுச்சேரி, காரைக்கால், மாகி மற்றும் ஏனாமில் 86 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த தேர்வுக்கான ஹால்டிக்கெட்டை தேர்வர்கள் https://recruitment.py.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு அனைத்து வேலை நாட்களிலும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை 0413-2233338 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தேர்வர்கள் ஆதார், வாக்காளர் அடையாள அட்டை, டிரைவிங் லைசென்சு, பாஸ்போர்ட், பான்கார்டு ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றின் அசலை எடுத்து வரவேண்டும். கைப்பை, செல்போன், ஸ்மார்ட் வாட்ச், புளூடூத், ஹெட்போன், கால்குலேட்டர் உள்ளிட்ட எந்தவிதமான பொருட்களும் தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்பட மாட்டாது என்பது தேர்வின் அடிப்படை விதியாகும்.
nandri tamil.news18