புதுடெல்லி: காங்கிரஸ் மூத்த தலைவரும் நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவருமான சோனியா காந்தி, டெல்லியில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக பிடிஐ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி டெல்லியில் உள்ள சர் கங்கா ராம் மருத்துவமனையில் நேற்று மாலை அனுமதிக்கப்பட்டுள்ளார். நாள்பட்ட இருமல் பிரச்சினைக்காகவும் வழக்கமான மருத்துவப் பரிசோதனைக்காகவும் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அவர் நலமுடன் உள்ளதாகவும், இதய நோய் நிபுணரின் கண்காணிப்பில் அவர் உள்ளதாக மருத்துவமனை வட்டாரம் தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

டெல்லியில் காற்று மாசு அதிகரித்துள்ள நிலையில், அவர் மருத்துவமனைக்கு அவ்வப்போது வருவதாகவும் விவரமறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன. கடந்த டிசம்பர் 2025-ல் சோனியா காந்திக்கு 79 வயது நிரம்பியது குறிப்பிடத்தக்கது.

Nandri hindutamil

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *