சென்னை: விஜய் டிவியில் பிக் பாஸ் தமிழ் சீசன் 9 ஆரம்பிச்சதுல இருந்து, “ஐயோ, ஷோவ் ரொம்ப போரிங்கா போகுதே!”ன்னு சமூக வலைதளங்கள்ல ஒரே புலம்பல் தான்! டி.ஆர்.பி. எதிர்பார்க்குற அளவு இல்லைன்னு தெரிஞ்சதும், பிக் பாஸ் உடனே ஒரு பெரிய பிளான் போட்டாரு!. நாலு வைல்டு கார்டு போட்டியாளர்கள் இறக்கி இருக்கிறார்கள். ஆனாலும் இப்போதும் பழைய நிலைதான் தொடர்கிறது. இந்த நிலையில் ரசிகர்கள் எதிர்பார்த்தபடியே ஒரு போட்டியாளர் வெளியேற்றப்படுகிறார்.
புது போட்டியாளர்கள்
சமீபத்துல நான்கு வைல்டு கார்டு (WILD CARD)போட்டியாளர்களை வீட்டுக்குள்ள அனுப்பி வச்சாங்க! அதுக்கு பிறகுதான் கொஞ்சம் சண்டை, சச்சரவுன்னு ஆரம்பிச்சது! பழைய போட்டியாளர்களுக்கும் புதுசா வந்தவங்களுக்கும் நடுவுல நடந்த வாக்குவாதம் தான் இப்போதைக்கு ஷோவுக்குக் கிடைச்சப் பெரிய ஹைலைட்.
ஆனா, இப்போ போட்டியாளர்கள் எல்லாம் ஒருவழியாச் செட்டில் ஆன மாதிரி இருக்காங்க. இந்தச் சமயத்துல இந்த வார எலிமினேஷன் (ELIMINATION) லிஸ்ட் வெளிய வந்திருக்கு!. இந்த வாரம் மொத்தம் 10 போட்டியாளர்கள் நாமினேஷன் லிஸ்ட்ல இருக்காங்க! இதுல யார் வெளியே போவாங்கன்னு பார்க்குறதுதான் இப்போ பெரிய ட்விஸ்ட்
எல்லாரும் எதிர்பார்க்காத ஒரு விஷயம் என்னன்னா… புதுசா வந்த வைல்டு கார்டு போட்டியாளர்கள் தான் இப்போ பயங்கரமா வாக்குகளை அள்ளித் தலைகீழா புரட்டி போட்டுருக்காங்க!
வைல்டு கார்டு (WILD CARD)போட்டியாளர்களான திவ்யா கணேஷ் மற்றும் சாண்ட்ரா ஆகியோர் தான் இப்போ குறைவில்லாத வாக்குகள் பெற்று டாப் இடத்தில் இருக்காங்க! திவ்யா கணேஷ் கடந்த வாரம் கத்திக்கிட்டே இருந்துட்டு, இந்த வாரம் திடீர்னு அமைதியானதெல்லாம் ஒரு ஸ்டேட்டஸ் (STRATEGY) போல! சாண்ட்ராவும் பிரஜின் மேலக் காட்டுற பாசமெல்லாம் ஒரு பிளஸ்சா மாறி இருக்கு.
மாட்டி கொண்டது இவர்கள் தான்
டாப்ல புது ஆட்கள் இருக்காங்கன்னா, அப்போ கீழே யார் இருக்காங்கன்னுப் பார்த்தா… ரொம்ப நாளா வீட்டுக்குள்ள இருந்தவங்களே மாட்டி இருக்காங்க!. ரம்யா ஜோ மற்றும் சுபிக்ஷா ஆகிய இருவரும் தான் ரொம்பக் குறைவான வாக்குகள் வாங்கி இருக்காங்களாம்!. அதனால, இந்த வார இறுதியில், இவங்க ரெண்டு பேர்ல ஒருத்தர் பிக் பாஸ் வீட்டை விட்டு கிளம்ப வாய்ப்பு இருக்கு! சுபிக்ஷாவோட அமைதி, ரம்யாவோட ஆட்டிட்யூட் எல்லாம் இந்தச் சமயத்துல ஓட்டு விழாம பண்ணி இருக்கலாம்!
வைல்டு கார்ட் வந்தவங்க எல்லாருமே ஒரு குரூப்பா சேர்ந்துட்டாங்க. திவாகர் சாப்பிடுறதைத் தவிர வேற எந்த வேலையும் இல்லைன்னு ஒரு குரூப் கலாய்க்க, வனிதா அக்காவை வரச் சொல்லி இந்த மிச்சர் பார்ட்டிக்கு ஒரு ‘டோஸ்’ கொடுக்கச் சொல்லி கோரிக்கை வைத்ததுல இருந்தே, இந்த சீசன் எவ்வளவு தலைகீழாக போகுதுன்னுத் தெரியுது! டாஸ்க் நடந்தாலும், ஒருத்தரை ஒருத்தர் மட்டம் தட்டுறதும், மத்தவங்க நிறத்தைக் கலாய்க்கிறதும்னுதான் வீட்டுல நடக்குது.
போன வாரம் பிரவீன் வெளியேற்றம் செய்யப்பட்டபோது உள்ளே மிச்சர் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் பலர் உள்ளே இருக்கிறார்கள் ஆனால் பிரவீன் நன்றாக விளையாடிக் கொண்டிருந்தார் அவரை வெளியேத்திட்டாங்களேன்னு பலர் பீல் பண்ணி வந்தனர். இப்போ ரசிகர்கள் எதிர்பார்த்தது போலவே ரம்யா அல்லது சுபி என இருவரில் ஒருவர் வெளியேற போகிறார்கள் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.
nandri oneindia
