கிராம வங்கியில் உதவி மேலாளர் காலிப்பணியிடம் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
நபார்டு எனப்படும் தேசிய வேளாண்மை மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியில், ஒரு லட்சம் ரூபாய் மாத ஊதியம் கொண்ட உதவி மேலாளர் பணிக்கு 91 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
 
அதன்படி, கிரேடு ஏ தரத்தில் கிராமப்புற வளர்ச்சி வங்கி பிரிவில் உதவி மேலாளர் பணிக்கு 85 காலிப்பணியிடங்கள் உள்ளன. இதற்கு, ஏதேனும் ஒரு பாடத்தில் 60 விழுக்காடு மதிப்பெண்களுடன் பட்டம் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என நபார்டு அறிவித்துள்ளது.
 
இதேபோன்று, 2 காலிப்பணியிடங்கள் கொண்ட கிரேடு ஏ தரத்திலான சட்ட உதவியாளர் பணிக்கு இளநிலை சட்டம் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
 
4 காலிப்பணியிடங்கள் கொண்ட கிரேடு ஏ தரத்திலான இணைய வழி பாதுகாப்பு பணிக்கான அறிவிப்பையும் நபார்டு வெளியிட்டுள்ளது.
 
எழுத்துத்தேர்வு, நேர்காணல் என 2 கட்டங்களாக நடைபெற உள்ள இத்தேர்வுக்கு தகுதியும் விருப்பமும் கொண்ட இளைஞர்கள், வரும் சனிக்கிழமை முதல் நவம்பர் 30 ஆம் தேதிக்குள் அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
Nandri news18-tamil

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *