சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் சென்னை எம்.ஐ.டி வளாகத்தின் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அலுவலக உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. இந்த பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாதம் ரூ.12,000 முதல் ரூ.24,000 வரை சம்பளம் வழங்கப்படும்.
அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் சென்னை எம்.ஐ.டி வளாகத்தின் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. திட்ட விஞ்ஞானி, திட்ட உதவியாளர், அலுவலக உதவியாளர் என பல்வேறு பிரிவுகளில் மொத்தம் 22 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.
பணியிடங்கள் விவரம்: திட்ட விஞ்ஞானி (குழுத் தலைவர்) – 2 இடங்கள் திட்ட உதவியாளர் நிலை II – 8 இடங்கள், திட்ட உதவியாளர் நிலை I – 6 இடங்கள், திட்ட தொழில்நுட்ப வல்லுநர் – 4 இடங்கள், அலுவலக உதவியாளர் – 1 என 22 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.
கல்வித் தகுதி: கல்வித் தகுதியை பொறுத்தவரை 8 ஆம் வகுப்பு,10 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு, டிகிரி முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும். கல்வித்தகுதி குறித்த முழு விவரங்கள் தேர்வு அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ளது.
சம்பளம் எவ்வளவு? திட்ட விஞ்ஞானி (குழுத் தலைவர்) – ரூ.40,000 முதல் ரூ.1,00,000 வரை திட்ட உதவியாளர் நிலை II – ரூ.25,000 முதல் ரூ.60,000 வரை திட்ட உதவியாளர் நிலை I – ரூ.20,000 முதல் ரூ.35,000 வரை திட்ட தொழில்நுட்ப வல்லுநர் – ரூ.15,000 முதல் ரூ.25,000 வரை அலுவலக உதவியாளர் – ரூ.12,000 முதல் ரூ.24,000 வரை வழங்கப்படும்.
எப்படி விண்ணப்பிப்பது? நேர்முகத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் தங்களின் சுயவிவரங்கள் மற்றும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப நகல்களை வரும் 10 ஆம் தேதிக்குள் தபால் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்
Nandri tamil.oneindia.
