பெனோனி: தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான இரண்டாவது யூத் ஒரு நாள் இந்திய அணி 8 விக்கெட்டில் வெற்றி பெற்றது.
தென் ஆப்ரிக்க சென்ற இளம் இந்திய அணி, மூன்று போட்டி கொண்ட யூத் ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் இந்தியா வென்றது. இரண்டாவது போட்டி நேற்று மீண்டும் பெனோனியில் நடந்தது ‘டாஸ்’ வென்ற தென் ஆப்ரிக்கா, பேட்டிங் தேர்வு செய்தது.
தென் ஆப்ரிக்க அணிக்கு ஜோரிச் (10), அத்னான் (25) ஜோடி துவக்கம் தந்தது. கேப்டன் புல்புலியா 14 ரன் எடுத்தார். டேனியல் 31 ரன்னில் அவுட்டாக, ஜேசன் ராவ்லஸ், 113 பந்தில் 114 ரன் எடுத்து உதவினார். தென் ஆப்ரிக்க அணி 49.3 ஓவரில் 245 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இந்தியா சார்பில் கிஷன் சிங் 4 விக்கெட் சாய்த்தார்.
வைபவ் ‘வேகம்’
இந்திய அணிக்கு கேப்டன் வைபவ் சூர்யவன்ஷி, ஆரோன் ஜார்ஜ் ஜோடி துவக்கம் தந்தது. முதல் விக்கெட்டுக்கு 6.1 ஓவரில் 67 ரன் சேர்த்த போது, ஆரோன் (20) அவுட்டானார். 10 சிக்சர் விளாசிய வைபவ், 24 பந்தில் 68 ரன் எடுத்து வெளியேறினார். இந்திய அணி 11 ஓவரில் 103/2 ரன் எடுத்த போது, மின்னல், மழை காரணமாக போட்டி நிறுத்தப்பட்டது.
மீண்டும் போட்டி துவங்கியதும் இந்திய அணியின் இலக்கு 27 ஓவரில் 174 ரன் என மாற்றப்பட்டது. முடிவில், இந்திய அணி 23.3 ஓவரில் 176/2 ரன் எடுத்து, வெற்றி பெற்றது. வேதாந்த் (31), அபிக்யான் (48) அவுட்டாகாமல் இருந்தனர். இந்திய அணி 2-0 என தொடரை கைப்பற்றியது.
nandri dinamalar

