சென்சார் பிரச்சனை காரணமாக விஜய் நடித்துள்ள ஜனநாயகன் திரைப்படம் திட்டமிட்ட படி ரிலீஸ் ஆவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், சென்சார் போர்டு மற்றும் மத்திய பாஜக அரசை முதல்வர் ஸ்டாலின் விமர்சித்துள்ளாக்.
நடிகரும் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவருமான விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு முதலில் U/A சான்றிதழ் வழங்க முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால், படத்தில் மத உணர்வை புண்படுத்தும் காட்சிகள் உள்ளதாக தணிக்கை குழுவைச் சேர்ந்த உறுப்பினர் ஒருவர் புகார் அளித்தார். இதனைத் தொடர்ந்து, படம் மறு தணிக்கைக்கு அனுப்பப்பட்டது.
 
இதனால், ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி ஜனவரி 9-ஆம் தேதி ‘ஜனநாயகன்’ திரைப்படம் வெளியாகாமால் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அத்துடன், சென்சார் போர்டு முடிவுக்கு எதிராக, ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான KVN புரொடக்‌ஷன்ஸ், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
 
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பி.டி. ஆஷா, ‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு U/A சான்றிதழ் வழங்க வேண்டும் என்று மத்திய திரைப்பட தணிக்கை வாரியத்திற்கு உத்தரவிட்டார். நீதிபதி ஆஷாவின் இந்த உத்தரவை எதிர்த்து சென்சார் போர்டு மேல்முறையீடு செய்யப்பட்டது.
மேல்முறையீட்டு மனு, தலைமை நீதிபதி ஸ்ரீவஸ்தவா – நீதிபதி அருள் முருகன் அமர்வில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இந்த வாதங்களை பரிசீலித்த நீதிபதி அமர்வு, ‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு U/A சான்றிதழ் வழங்குமாறு தனி நீதிபதி பி.டி. ஆஷா அளித்த உத்தரவுக்கு தற்காலிக தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. மேலும், ‘ஜனநாயகன்’ சென்சார் வழக்கின் அடுத்த விசாரணை ஜனவரி 21-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
 
இதனால், ‘ஜனநாயகன்’ திரைப்படம் பொங்கலுக்கு ரிலீஸாக முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. அதேபோல, சிவகார்த்திகேயன் நடிப்பில் பராசக்தி திரைப்படத்திற்கும் சென்சார் போர்டு 25 மாற்றங்களை மேற்கொள்ள செய்த பின்னர், U/A சான்று வழங்கப்பட்டுள்ளது.
 
இந்நிலையில், தமிழ்நாட்டில் மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த இரு திரைப்படங்களும் சென்சார் பிரச்சனையில் சிக்கியது குறிக்கும் விதமாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கண்டனப் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக முதல்வர் தனது எக்ஸ் வலைத்தளப் பதிவில், “CBI, ED, IT வரிசையில் சென்சார் போர்டும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் புதிய ஆயுதமாக மாறியுள்ளது. கடுமையான கண்டனங்கள்” எனக் கூறியுள்ளார்.
 
திமுகவை அரசியல் எதிரி என விஜய் தொடர்ச்சியாக கூறி அரசியல் செய்து வரும் நிலையில், சென்சார் விவகாரத்தில் முதல்வர் வெளியிட்டுள்ள இந்த பதிவு கவனம் பெற்றுள்ளது. அதேவேளை, முதல்வரின் இந்த பதிவில் ஜன நாயகன் என்றோ பராசக்தி என்றோ எந்த படத்தின் பெயரும் நேரடியாக குறிப்பிடப்படவில்லை என்பதும் கவனிக்கத்தக்கது.
 Nandri timesnownews

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *