கர்ராரா: இந்திய அணி 167 ரன்கள் எடுத்துள்ள நிலையில், ஆஸ்திரேலியா அணிக்கு 168 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது.
இந்தியாவுக்கு எதிரான 4வது டி20 கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி 5 போட்டி கொண்ட ‘டி-20’ தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி மழையால் ரத்தானது. 2, 3வது போட்டியில் ஆஸ்திரேலியா, இந்தியா வெற்றி பெற, தொடர் 1-1 என சமனில் உள்ளது. நான்காவது போட்டி இன்று கோல்டு கோஸ்ட்டில் உள்ள கர்ராரா மைதானத்தில் நடக்கிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி, இந்தியா முதலில் பேட்டிங் செய்தது.
டிராவிஸ் ஹெட், ஹேசல்வுட் என இரு முன்னணி வீரர்கள் இல்லாமல் ஆஸ்திரேலிய அணி களமிறங்குகிறது. இதனால் கேப்டன் மிட்சல் மார்ஷுடன், இன்று மாத்யூ ஷார்ட் துவக்கம் தர காத்திருக்கிறார். அதுதவிர கடந்த 3 போட்டிகளில் ஆடும் லெவனில் இடம்பெறாமல் இருந்த ‘ஆல் ரவுண்டர்’ மேக்ஸ்வெல் வருகை அணிக்கு பலம் சேர்க்கிறது.
இந்தப் போட்டியில் ஆஸி.,யைத் தோற்கடித்து இந்திய அணி தொடரில் முன்னிலை பெறுமா? என்று ரசிகர்கள் பெரும் எதிர்பார்த்துள்ளனர்.
முதலில் ஆடிய இந்திய அணி 20 ஓவர்களில் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் எடுத்தது.
துவக்க வீரர்களான அபி ஷேக் சர்மா, சுப்மன் கில் நல்ல துவக்கம் கொடுத்தனர். இந்நிலையில் அபிஷே க் சர்மா 28 ரன்களும், சுப்மன் கில் 48 ரன்களிலும் அவுட் ஆகி வெளியேறினர்.
அடுத்து வந்த ஷிவம் துபே 22 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 20 ரன்களும் சேர்த்து அவுட் ஆகினர். அக்ஷர் பட்டேல் ஒரளவு விளையாடி 21 ரன்கள் சேர்த்தார். இறுதியில் இந்திய அணி, 20 ஓவர்களில் 167 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
168 ரன்கள் இலக்குடன் ஆஸ்திரேலிய அணி அடுத்து விளையாடி வருகிறது.
nandri dinamalar
