மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில்
பாண்டிய மன்னர்களால் தொடங்கப்பட்டு,பிற்காலத்தில் நாயக்க மன்னர்களால் விரிவுபடுத்தப்பட்ட
பழமையான திராவிடப் பெருங்கோயிலாகும்.
மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் குடமுழுக்கு விழா
நம் மண்ணின் ஆன்மீக மற்றும் வரலாற்று பாரம்பரியத்தின் பெருமையை எடுத்துரைக்கும் விழா என்று வலைப்பதிவில்
முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார்.
மதுரை மீனாட்சியம்மன் கோவில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு
கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது .

மதுரை மாநகரமே விழாக்கோலம் பூண்டு,
பக்தர்கள் கூட்டத்தால் மாசி வீதிகள் நிரம்பி வழிந்தன.
பக்தர்களுக்கு இரண்டு லட்சம் பிரசாத பைகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது.
மஞ்சள், குங்குமம்,விபூதி ,தண்ணீர், பிஸ்கட் அடங்கிய பிரசாத பைகள் பக்தர்களுக்கு வழங்கப்பட்டன.
12 கோபுரங்களிலும் புனித நீர் ஊற்றி வழிபாடு செய்யப்பட்டது .
பார்த்து பார்த்து கவனமாக எல்லா ஏற்பாடுகளையும் செய்திருக்கிறோம்.
மூன்று மாதத்திற்கு முன்னே திட்டமிட்டு சிறப்பாக நடத்தி முடித்திருக்கிறோம்
அமைச்சர் ரமேஷ்.
நுழைவுசீட்டு இல்லாததால் தங்களை கோவிலில் அனுமதிக்கவில்லை என பொதுமக்கள் குற்றச்சாட்டு
“ட்ரோன் மூலமாக தீர்த்தம் தெளிக்கப்பட்டிருக்கலாம்” எனவும் பக்தர்கள் ஆதங்கம்
“உள்ளே என்ன நடக்குதுன்னு தெரியாம மக்கள் கோவப்படுறாங்க
ஆனா இதெல்லாம் உங்க பாதுகாப்புக்காக தான்”
அமைச்சர்கள் நாங்கள் கூட தரிசனத்துக்கு செல்லவில்லை என
சிசிடிவி ஆய்வு செய்து அமைச்சர் நிர்மல் குமார் கூறினார்.
பக்தர்களுக்கு தண்ணீர் பாட்டில், ஐஸ் மோர் ,குளிர்பானங்கள் வழங்கிய இஸ்லாமியர்கள்.
பக்தர்கள் இடையே நெகிழ்ச்சியாக பார்க்கப்பட்டது.
பல்லாயிரக்கணக்கான மக்கள் மத்தியில்
மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயில் குடமுழுக்கு இனிதே நடந்தேறியது .
