மிகவும் எதிர்பார்த்த ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 18 விற்பனை
நாடு முழுவதும் இன்று தொடங்கியது .
ஆப்பிள் நிறுவனம் ஒவ்வொரு வருடம் செப்டம்பர் மாதம்
தனது புதிய தயாரிப்புகளை வெளியிடுகிறது.
இந்த நிலையில் இந்தியாவில் ஆப்பிள் விற்பனை
இன்று நாடு முழுவதும் தொடங்கியது.

மும்பை ஆப்பிள் ஸ்டோர் வளாகத்தில்
நீண்ட வரிசையில் நின்ற வாடிக்கையாளர்கள் .
ஆப்பிள் இந்தியா ஸ்டோர் மற்றும் 6 அதிகாரப்பூர்வ
ஆப்பிள் ரீடைல் ஸ்டோர்களில் ஐபோன் 18 விற்பனை.
ஐபோன் 18 ப்ரோ , 18 ப்ரோ மேக்ஸ் , ஐபோன் டியோ
ஆகிய மாடல்களை கடந்த 9-ம் தேதி ஆப்பிள் அறிமுகம் செய்தது.
ஐபோன் 18 ப்ரோ 1,64,900/-
ஐபோன் 18 ப்ரோ மேக்ஸ் 1,79,900/-
ஐபோன் டியோ 2,99,900/- என தொடக்க விலைகளாக நிர்ணயம்.

மும்பை,டெல்லி போன்ற நகரங்களில்
நள்ளிரவு முதலே வரிசையில் காத்திருந்து புதிய போனை
வாங்கிச் சென்ற மக்கள்.
என்ன தான் ஐபோன் விலை அதிகமாக இருந்தாலும்,
அதன் தனித்துவத்திற்காகவும், உயர்தர உணர்விற்க்காகவும் ,
சிறந்த பாதுகாப்பு வசதிக்காகவும் என பல தரப்பட்ட
மக்களால் வாங்கப்படுகிறது.
பழங்களில் ஆப்பிள் எப்படி சிறந்த நிலையில் உள்ளதோ..
அது போல் ஆப்பிள் ‘ஐபோன்’ தரமும், விலையும் உயர்வாக உள்ளது…!!
