பசுபிக் பெருங்கடலை வெப்பமாக்கும் எல் நினோ நிகழ்வு தொடங்கி விட்டது என உலக வானிலை அமைப்பு அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு.

உலகம் முழுவதும் சூப்பர் எல் நினோ மிகப்பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. அதனால் உலகம் முழுவதும் கடும் வறட்சியும் வெப்பமும் மிகக் கடுமையாக இருக்கிறது. இதனால் பல பகுதிகளில் பெரும் வெள்ளமும் புயல் மழையும் தீவிர வானிலை பாதிப்புகளை ஏற்படுத்தும்.

இதனால் கடும் வறட்சி ஏற்பட்டு விவசாயம், மீன்வளம் பாதிக்கப்படும் அபாயம் உருவாகி உள்ளது .

இது 2027 பிப்ரவரி மாதம் மிக தீவிரமான நிலையை எட்ட வாய்ப்புள்ளதாக உலக வானிலை அமைப்பு தெரிவித்துள்ளது.

கடந்த ஆயிரம் ஆண்டுகள் இல்லாத அளவுக்கு பசிபிக் பெருங்கடலின் மேற்பரப்பு வெப்பம் 4 டிகிரிக்கு மேலாக அதிகரிக்க உள்ளதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

மேலும் விவசாயம், விலங்கு நலன் ஆராய்ச்சியில் ஆராய்ச்சிகளை போன்றவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்க விஞ்ஞானிகள் வலியுறுத்துகின்றனர்.

உலகின் பல பகுதிகளில் கடும் வறட்சியும், கடும் வெள்ளமும் ஏற்பட வாய்ப்பு உள்ளது. கடந்த 50 ஆண்டுகால வானிலை கண்காணிப்பு வரலாற்றில் இவ்வளவு உறுதியான எச்சரிக்கை விடுக்கப்படுவது இதுவே முதல்முறை எனவும் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, ஒடிசா, குஜராத், ராஜஸ்தான், பீகார், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட், உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் உள்ள 326 மாவட்டங்களில் சூப்பர் எல் நினோ கடும் பாதிப்புகளை ஏற்படுத்த உள்ளது.

இதை எதிர்கொள்ள மாவட்ட ஆட்சியர்கள் வேளாண் அறிவியல் மையங்கள் ஒருங்கிணைந்த ஆலோசனை கூட்டங்களை நடத்த வேண்டும் என மத்திய வேளாண் அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் கூறியுள்ளார்.

2015 மற்றும் 1997 ஆம் ஆண்டு ஏற்பட்ட எல் நினோ பாதிப்புகளை விட அதிகமாக இருக்கும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

2026 ஆம் ஆண்டு தொடர்ந்து 2027 ஆம் ஆண்டும் மிகக் கடுமையான வெப்பம் நிறைந்த ஆண்டாக இருக்கும் என உலக வானிலை அமைப்பு தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *